சிரியா – ஈராக்கில், ஐஎஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் அடுத்த வாரத்தில் விடுவிக்கப்படும்- டிரம்ப்

0
74
சிரியா மற்றும் ஈராக்கில், ஐஎஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் அடுத்த வாரத்தில் விடுவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்து கொண்ட ஐஎஸ் அமைப்பு அங்கு தனது ஆட்சியை நடத்தி வந்தது.
ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக உலகளாவிய கூட்டணி  உருவானது. அதில் தற்போது சுமார் 80 நாடுகளைச் சேர்ந்து உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவுக்கு வெளியேறவும் பயங்கரவாதத் தாக்குதல்களை ஐஎஸ் அமைப்பு நடத்த தொடங்கிய பிறகு 2014 ஆம் ஆண்டில் இந்த கூட்டணி உருவானது.
வாஷிங்டனில்  நடந்த கூட்டணி நாடுகளின் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-
 ‘ஐஎஸ் அமைப்பின் பீடம் தகர்க்கப்பட்டுவிட்டது. அவர்களின் இடம் பறிபோய்விட்டது.
இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும், அநேகமாக அடுத்த வாரம் ஏதாவது ஒரு சமயத்தில், நாம் 100% கலிபாவில் இருப்போம்,”  எனினும், இது தொடர்பான அதிகாரபூர்வ வார்த்தைக்காக காத்திருக்க வேண்டும்.
இந்த குழுவை சேர்ந்த இன்னும் மிக சிறிய அமைப்புகள் மிகவும் ஆபத்தானவை” வெளிநாட்டு போராளிகள் தாக்குதல் நடத்த அமெரிக்காவை நெருங்கவிடக்கூடாது.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நம்மை விட அவர்கள் இணையத்தை சிறப்பாக பயன்படுத்தினர்.  அவர்கள் அற்புதமாக இணையத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது அது மிகவும் திறமையாக இல்லை.
இனி வரும் பல ஆண்டுகளில் நாம் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம் என கூறினார்.
சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறும் போதிலும், ஐஎஸ் குழுவை எதிர்த்து அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ உறுதியளித்தார்.
இதற்கிடையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்று, தொடர்ச்சியான அழுத்தம் இல்லாது போனால் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் சிரியாவில் மீண்டும் ஐஎஸ் அமைப்பு தலைதூக்கும் என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.