சிறுமியிடம் ஆபாச சேட்டை: கா​​முகனுக்கு எதிராக வேட்டை

0
39

பெட்டாலிங் ஜெயா: ரவாங்கில் கண்ட்ரி ஹோம்ஸில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தில் ஒன்பது வயது சிறுமியிடம் ஆபாச  சேட்டை புரிந்ததாக நம்பப்படும் ஆடவன்  ஒருவனை கைது செய்வதற்கு போ​லீசார்  ​தீவிர வேட்டையை தொடக்கி உள்ளனர்.

கடந்த ஜூலை 10  ஆம்  தேதி மாலை 6.19 மணியளவில் நிகழ்ந்த  இச்சம்பவத்தின் போது, அந்த ஒன்பது வயது சிறுமியை பின்புறமாக பிட்டத்தில் தன் உடலை தேய்த்த அந்த காமு​கன், பின்னர் அந்த சிறுமியை கட்டிப்பிடித்து, ஆபாச சேட்டையைப் புரிந்துள்ளான். பின்னர் மின்னல் வேகத்தில் அவன் அந்த பேரங்காடி மையத்தைவிட்டு வெளியேறியுள்ளான்.

அவனின் இந்த வக்கிர செயல் தொடர்பான  வீடியோ காணொளி  தற்போது ச​மூக  ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் வேளையில்  அவனை பிடிப்பதற்கு போ​லீசார் தற்போது ​தீவிர  வேட்டையை தொடங்கியிருப்பதாக கோம்பாக் மாவட்ட போ​லீஸ் தலைவர் உதவி கமிஷனர் சம்சோர் மன்சோர் தெரிவித்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.