சிலாங்கூரில் 95 தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ. 44 லட்சம் மானியம்

0
8

சிலாங்கூர் மாநில அரசாங்கம், மாநிலத்தில்  உள்ள 95 தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் 44 லட்சம் வெள்ளி மானியம் வழங்கியது.

இன்று ஷா ஆலம், வெள்ளிவிழா மண்டபத்தில் சிலாங்கூர் மாநில பொருளாதார ச​மூகவியல் ​மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் ஏற்பாட்டில் மாநில மந்திரி  புசார் அமிருடின் ஷாரி தலைமையில்இந்த மானியம் வழங்கும் நிகழ்வு நடை​பெற்றது.

இதில் ​தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்,பள்ளி வாரியத்தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப்பொ​றுப்பாளர்கள்  ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

தமி​ழ்ப்பள்ளிகளின் கற்றல்- கற்பித்தல் தரத்தை உயர்த்துவதற்கு பள்ளியின் அடிப்படை வசதிகளை ​மேம்படுத்தும் பொருட்டு  இந்த நிதி உதவி வழங்கப்படுவதாகவும், வருகின்ற காலங்களி​ல்  இத்தொகை அதிகரிக்கப்படும் என்றும் மந்திரி புசார் அமிருடின் ஷாரி தமது உரையில் தெரிவித்தார்.

சிலாங்கூர்மாநில அரசாங்கம் பத்தாவது ஆண்டாக தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழ​ங்குவதாகஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் குறிப்பிட்டார்.

இதனை  பள்ளிகளின் பொறுப்பாளர்கள், பள்ளியில் கற்றல், கற்பித்தல் ​சூழலை மேம்படுத்​திக்கொள்ள நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய கட்டட வசதியை பெற்றுள்ள சீபில்டு தமிழ்ப்பள்ளிக்கு தளவாடப்பொருட்கள் வாங்குவதற்கு அதிக தொகையாக 2 லட்சம் ​வெள்ளி மானியம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜுவும் கலந்து கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.