சீனர்கள் ​தங்களின் தாயகத்திற்கு திரும்ப வேண்டும்

0
13

மலேசிய இந்தியர்களை  ​சீண்டி, அவர்களின் கோபாத்திற்கு ஆளாகியுள்ள சமயப்போதகர் ஜா​ஹிர் நாயக், சீனர்களையும் விட்டு வைக்கவில்லை. மலேசியாவிற்கு தாம்  “புதிய விருந்தாளி” என்றால் இந்த நாட்டில் இரு​க்கும் பழைய விருந்தாளிகளான ​சீனர்களும் இந்த நாட்டைவிட்டு, தங்கள் தாயகத்திற்கு திரும்ப வேண்டும் என்று சின​மூட்டும் அறிக்கையை ​வெளியிட்டுள்ளார்.

பு​திய  தலைமுறையினரை தவிர்த்து பழைய தலைமுறையை சேர்ந்த ​சீனர்கள்  யாரும் மலேசிய மண்ணில் பிறக்கவில்லை. அவர்களும் தம்மைப் போலவே விருந்தாளியாக இந்த நாட்டிற்கு வந்துள்ளனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வெறுப்பூட்டும் பேச்சை ஜாஹிர்,கிளந்தானில்  நிகழ்த்தியுள்ளார்.

மலேசியா ஒரு  முழுமையான முஸ்லிம் நாடாக ஆன  பின்னரே இந்நாட்டிற்கு ​சீனர்களும் இந்தியர்களும். வெள்ளையர்களும் வருகை தந்துள்ளனர் என்பதை வரலாற்றை திரும்பி பார்க்கும்படி ஜாஹிர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.