‘சீனாவையே எதிர்க்கத் துணிந்தவர்’ – மகாதிருக்கு அமெரிக்கப் பேராசிரியர் புகழாரம்

0
57

உலகின் மற்ற தலைவர்கள் சீனாவிடம் பணிந்துபோன நிலையில் அதை எதிர்த்து நிற்கத் துணிந்தவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் என்று பொருளாதார நிபுணர் பானோஸ் மூர்டுகோடாஸ் பாராட்டியுள்ளார்.

கிழக்குக்கரை இரயில் திட்டத்துக்கு(இசிஆர்எல்) ஆகும் செலவை ரிம65 பில்லியனிலிருந்து ரிம44 பில்லியனாகக் குறைப்பதில் புத்ரா ஜெயா அடைந்த வெற்றியைக் குறிப்பிட்டுத்தான் அவர் அவ்வாறு பாராட்டினார்.

“சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புத் திட்டங்கள் பொருளாதாரப் பயன் தரக்கூடியவை அல்ல. பெரும் பணச் செலவில் மேற்கொள்ளப்படும் அத்திட்டங்கள் நாடுகளை பெய்ஜிங்கிடம் கடனாளி ஆக்கி விடுகின்றன, என நியு யோர்க், புரூக்வில்லில் உள்ள லோங் ஐலண்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைத் தலைவரும் பேராசிரியருமான மூர்டுகோடாஸ் ஃபோர்பஸ் சஞ்சிகையில் எழுதியுள்ளார்.

மலேசியாவுடன் ஒப்பிடும்போது ஸ்ரீலங்கா மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், கொழும்பு துறைமுக நகர் திட்டம், மட்டாலா ராஜபக்‌ஷா அனைத்துலக விமான நிலையம் ஆகியவை அந்நாட்டைப் பெரும் கடனாளியாக்கியுள்ளது என்றாரவர்.

malaysiakini

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here