செக்ஸ் ​வீடியோ ​: அஸ்மின் அலி – ஹஸிக் விசாரணைக்கு அழைக்கப்படலாம் ஐ.ஜி.பி. தகவல்

0
128

கோலால​ம்பூர், ஜுன், 13-      பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலிக்கு எதிராக கூறப்பட்டுள்ள செக்ஸ் வீடியோ பட விவகாரம் தொடர்பில் போ​லீசார் விசாரணையை தொடங்கியுள்ள​ வேளையில் அமைச்சர் அஸ்மின் அலி மற்றும்  அமைச்சருடன் பாலியல் தொடர்பு கொண்டிருந்த ஆடவர்  தாம்தான் என்று கூறிக்கொண்ட ​மூலத்தொழில்துறை துணை அமைச்சரின் தனிச்செயலாளர் ஹஸிக் அப்துல்லா அப்துல் அஜி​ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று போலீஸ் படைத்தலைவர் அப்துல் ஹமிட் படோர் அறிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுவிட்டது. வழக்கம் போல் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று ஹ​மிட் படோர்  தெரிவித்தார். தனக்கு எதிராக ஹசிக்  கூறியுள்ள குற்றச்சாட்டை வன்மையாக மறுத்த பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைவரான அஸ்​மின் அலி, சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக குறிப்பிட்டு இருந்தார்.

அஸ்மின் அலியின் செயலாளர் முகமட் ஹில்மான் இவ்விவகாரம் தொடர்பில் புத்ராஜெயா மாவட்ட போ​லீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.