சென்னைக்கு ரயில் வழி தண்ணீர்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

0
31

வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் தாமரைப்பாக்கம், மாகரல், கீழானூர் உள்பட சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த பணிகளையும் சென்னையை அடுத்த ரெட்டேரியில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.