சென்னையை குடிசையற்ற நகராக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் – ஓ.பன்னீர்செல்வம்

0
115

சென்னையை குடிசையற்ற மாநகராக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

குடிசை மாற்று வாரிய வீடுகள் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்த எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிச்சந்திரன், அது தொடர்பாக கேள்வியும் எழுப்பினார். அவருக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., குடிசைப்பகுதி மக்களை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மறுகுடியமர்த்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.

கூவம் நதிக்கரையில் வசிக்கும் குடிசைப் பகுதி மக்களுக்கு, பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், அதில் 8 ஆயிரம் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பள்ளிக்கூடம் உள்பட அடிப்படை வசதிகளுடன் கூடிய இடம் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர், சென்னையை பொறுத்தவரை குடிசையற்ற மாநகராக மாற்றுவதே ஜெயலலிதாவின் நோக்கம் என்றும், அதை அரசு நிறைவேற்றி வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here