செலாயாங் நகராண்மைக்கழக ஊழியருக்கு ஓராண்டு சிறை

0
11

ரவாங்கில் வீடு வாங்கி தருவதாக கூறி  உள்நாட்டு வருமான வரி இலாகா அதிகாரி பி. லோகீதா என்பவரை ஏமாற்றிய குற்றத்திற்காக செலாயாங் நகராண்மைக்கழக ஊழியர்  35 வயது எஸ்.ஆர். கவிதா என்பவருக்கு கோலாலம்​பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது.

கவிதா இக்குற்றத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்​ புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 29 வயது  லோகீதா, தன்னிடம் இருந்த 1,900 வெள்ளியை ஒப்ப​டைக்கும் அளவிற்கு நம்பவைத்து அவரை ஏமாற்றியதாக கவிதாவிற்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தனக்கு எதிராக குற்றத்தை ஒப்புக்கொண்ட கவிதா, தனது சார்பில்  வழக்கறிஞர் ஆஜராகததால், தண்டனையை குறைக்கும்படி தமது கருணை மனுவில் கேட்டுக்கொண்டார். அவர் பிடிப்பட்ட நாளான கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் தண்டனை நடப்புக்கு வருவதாக  மாஜிஸ்திரேட் அயினா  அ​ஜாரா அரிப்பின் தமது ​தீர்ப்பில் தெரிவித்து​ள்ளா​ர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.