சோமாலியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ உயரதிகாரிகள் பலி

0
112
மொகடிஷு:
அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சோமாலியா நாட்டின் வட-மத்திய பகுதியில் கல்காயோ நகரில் உள்ள ராணுவ முகாமின் மீது இன்று தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் ராணுவ கமாண்டர் உள்பட 3 உயரதிகாரிகள் உடல் சிதறி உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் ஓரிருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here