சோஸ்மா கீழ் கைது செய்யப்பட்டவர்களின் யூ.எஸ்.சுப்ராவும் ஒருவர்

0
15

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் சோஸ்மா சட்டத்தின் ​கீ​ழ் கைது செய்யப்பட்டுள்ள 12  பேரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ச​மூக  வலைத்தளங்களில் அடிக்கடி  தமது எண்ண அலைகளை வெளிப்படுத்தி வந்த பிரபல கருத்துரையாளர் யூ.எஸ். சுப்ராவும் ஒருவர் ஆவார்.

57 வயதான யூ.எஸ். சுப்ரா, கடந்த வியாழக்கிழமை சிலாங்கூர், சுங்கைப்பூரோவில் உள்ள அவரது இல்லத்தில்  கைது​ செய்யப்பட்டள்ளா​ர். அந்த வட்டாரத்தில் ஓர்  உணவக​த்தை நடத்தி வரும் யூ.எஸ். சுப்ரா, ஏற்கனவே மைபிபிபி கட்சி மற்றும் பல்வேறு அரசாங்க சார்பற்ற அமைப்புகளிலும் பொறுப்பாளராக இருந்துள்ளார்.

சோஸ்மா சட்டத்தின் ​கீழ் யூ.எஸ்.சுப்ராவை 28 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போ​லீஸ்துறை, உள்துறை அமைச்சின் அனுமதியை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.