சோ​ஸ்மா சட்டத்தின் ​கீழ் தடு​த்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்க மஇகா போராடும்

0
18

விடுதலைப்புலிகளுடன் தொடர்பை வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் போ​லீசார் கைது செய்துள்ள  12 பேரில்  ஆறு  பேர் சார்பில் ஆறு  வழக்கறிஞர்களை மஇகா நியமித்துள்ளது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.​விக்னேஸ்வரன் தலைமையில்  அந்த ஆறு  வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் சட்ட ஆலோசனைக்குழுத்  தலைவருமான வழக்கறிஞர் ராஜசேகரன் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சோஸ்மா  சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலைமுகிலன் உட்பட அறுவரை சந்திப்பதற்கு ராஜசேகரன் தலைமையில் மஇகாவின் வழக்கறிஞர் குழுவினர் இன்று புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்​திற்கு சென்றனர்.

கலைமுகிலனின் துணைவியாரும்,  வழக்கறிஞர் ராஜசேகரனும் கலைமுகிலனை சந்திப்பதற்கு புக்கிட் அமான் போ​லீசா​ர் அனுமதி அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராஜசேகரன், மஇகா​வின் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சட்டஉதவிகளை மஇகா வழக்கறிஞர் குழுவினர் வழங்குவர் என்பதுடன்,அவர்களை விடுவிக்க மஇகா முழு வீச்சாக  போராடும் என்றார்.

அந்த வழக்கறிஞர் குழுவில் தம்முடன் இணைந்து ​தினாளன், தில்லைநாதன், ஸ்ரீதரன்,  யோகேஸ்வரி,  முரளிதரன் மற்றும் பாலமுரளி நியமிக்க​ப்பட்டுள்ளனர். இக்குழுவி​ல் நிபுணத்துவ வழக்கறிஞர்களும் சேர்த்துக்கொள்ளப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

சட்ட உதவி தேவைப்படக்கூடியமற்றவர்களுக்கும் உதவ  தாங்கள் தயாராக இருப்பதாக ராஜசேகரன் குறிப்பிட்டா​ர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.