ஜசெகவின் பொதுத்தேர்தல் கனயுலகில் இந்தியத்தலைவர்களின் குருட்டுக்கணக்கும்!

0
409

கட்சித்தேர்தலில் கரையேற முடியாதவர்களுக்கு

தொகுதிப்பங்கீட்டில் ஏகப்பட்ட புறகணிப்பா ?

ஜசெகவிலுள்ள  இந்தியத்தலைவர்கள் சிலருக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது. யாருக்கு தொகுதி? யாருக்கு இல்லை ,என்ற பீதி இப்போது பரவலாக கிளப்பிவிடப்பட்டுள்ளதால் பழைய ஆட்களுக்கு ஒரு சமயம்  தொகுதி கிடைக்காமல் போகக்கூடுமோ என்ற பயம் வாட்டி வதைப்பததால் ஜசெக வட்டத்தில் சிலருக்கு கடும் சுரமே எடுக்கத்துவங்கியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களாகயிருக்கிற சிலருக்கு நாடாளுமன்றம் போக ஆசை வந்துவிட்டது. அந்த ஆசைக்கு காரணமே அடுத்த ஆட்சி ஹராப்பான் கூட்டணி வசப்படும் என்ற நம்பிக்கைத்தான்.அப்படி அமைந்தால்  மந்திரியாகலாம் என்ற நினைப்பும் வேகப்பட்டுள்ளது.

அதனாலே இந்த முறை ஜசெக வின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர்

நாடாளுமன்றம் நுழைய ஆசைப்பட்டுள்ளனர்.

தற்போதைய ஜசெகவின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாகயிருக்கிற குலசேகரனுக்கு அமைச்சராகும் ஆசையிருக்கவே செய்யும்,அவர் கட்சியைப்பொறுத்தவரை பழைய நபரே! அடுத்து கோவிந் சிங் தகுதிப்படலாம், அடுத்து ராம்சிங், இந்த இருவரும் கர்பாலின் மகன்கள் என்றவகையில் கட்சியில் எப்படி களநிலவரம் அமையுமோ தெரியவில்லை. அடுத்து மறைந்த பட்டுவின் மகள் கஸ்தூரிக்கான வாய்பையும் கட்சித்தலைமை யோசிக்க வேண்டியே இருக்கும். அடுத்துள்ள நபர் சிவக்குமாராகும்.,இவரும்

நீண்ட காலமாக களத்தில் இருந்து வருகிறார்.

இந்த அடிப்படையில் அரசியல் தாயத்தை நகர்த்தும் போது; பினாங்கு

துணை முதல்வர் இராமசாமி நாடாளுமன்றம் தாவப்பார்க்கிறார். ஆனால், அவருக்கு இந்த முறை சட்டமன்றம் கிடைக்குமா என்பதே கேள்வியாகியுள்ளது. கட்சித்தேர்தலிலேயே அவரை காலைவாரி விட்டானர் சீனர்கள். அடுத்து மனோகரன் இவரும் இந்த முறை ஏதாவது ஒரு தொகுதிக்காக வேட்டையாட வேண்டியுள்ளது. அதேவேளை இந்தமுறை சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினராகயிருந்து வரும்

கணபதிராவ் கதை என்னவாகுமென்று தெரியவில்லை, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியானது, கெஅடிலான்- ஜசெக என்றளவில் சுற்றுமுறையில் இருப்பதால், இந்த முறை ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமைத்தால், அந்த பதவி  கெஅடிலான் பக்கம் போய்விடும் என்பதால் கணபதிராவ் அவருக்கான நாடாளுமன்றத்தொகுதி நாடிப்போக வேண்டிவரலாம். இதற்கிடையில் தற்போதை சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தொகுதியில் களமிறங்க எண்ணியுள்ளார். அப்படி அவர் களமிறங்கினாலும்,இந்த முறை அந்த தொகுதியில் நிகழும் நான்கு முனைப்போட்டியால் ஜசெக மண்ணைக்கவ்வப்போவது உறுதியாகி விட்டது.

எனவே, இந்த முறை ஜசெகவிலுள்ள  இந்தியத்தலைவர்களிடையே நிறைய குடும்பிடிச்சண்டைகளும் உள் குத்து வேலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது

கட்சித்தேர்தலிலும் இன்னொரு இந்தியனுக்கு இன்னொரு இந்தியன் வேட்டு வைத்துவிட்டான் என்ற அபயக்குரலும் அக்கட்சிக்குள் அலறிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த லட்சணத்தில் எந்த தொகுதியில் எந்த இந்தியன் போட்டிப்போட்டாலும் பலர் கரை சேரப்போவதில்லை,  அதாவது குருடன் பகலில் கனவுக்கண்டாலும் இரவில் கனவுக்கண்டாலும், அவன் கண்ட கனவை யாருக்கும் விவரிக்க முடியாதநிலை போன்றே   ஜசெகவின் தேர்தல் கனவும் கணக்கும் களையப்போகிறது  என்றே தெரிகிறது.

 

திசைகளுக்காக

களத்திலிருந்து

உங்கள் சாணக்கியன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.