ஜம்மு – காஷ்மீரின் பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

0
49

நாளை மொஹரம் பண்டிகை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பல இடங்களில் ஊரடங்குக்கு நிகரான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மொஹரம் ஊர்வலம் நடத்தும் போது, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தடை உத்தரவை மாநில நிர்வாகம் பிறப்பித்துள்ளது. ஸ்ரீநகரில் உலா லால் சவுக் உள்ளிட்ட அனைத்து வர்த்தக மையங்களுக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்குள் வரும் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு ஏராளமான போலீசார், பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.