ஜாவி ஆதரவளிக்கிறதா? தமிழ்ப்பள்ளிக் காப்பகம்? தமிழர் தன்மான இயக்கம் கேள்வி?

0
13

கோலாலம்பூர்- ஆக-15 டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா தலைமையில் அமையப்பெற்றுள்ள தமிழ்ப்பள்ளிகளின் காப்பகம் ஜாவி காட் எழுத்து நுழைவுக் குறித்து; இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதேன்என்று, மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தலைமைச்செயலாளர் சிமு. விந்தைக்குமரன்
கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ்ப்பள்ளிகளின் விவகாரங்களைக், கவனிக்கவும் பிரச்சனைகள் எழுந்தால் அவற்றைக் களையவும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துக்கொண்டுள்ள காப்பகத்தின் இன்றைய

நிலைதான்யென்ன? கல்வியமைச்சு
வழி பிரகடனம் செய்துள்ள ஜாவியை காப்பாகம் ஆதரிக்கிறதா? இல்லையா? என்று சந்தாரா தலைமையிலான காப்பகம்; இன்னும் ஊமையாகயிருப்பதேன்
தமிழ்ப்பள்ளிகளில் அமலாக்கம் பெற திட்டமிட்டுள்ள ஜாவிக்கும் , காப்பகத்திற்கும் எந்தவகையான தொடர்புமில்லையா?

அல்லது காப்பபத்தின் ஆதரவுப்பெற்றுதான் ஜாவி நுழைக்கப் படுகிறதா? என்பதை அதன் தலைவர் எட்மெண்ட் சந்தாரா விளக்க வேண்டுமென்று தன்மான இயக்கத்தலைமைச்செயலாளர் விந்தைக்குமரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.