ஜாவி எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய உமாகாந்தன் கைது

0
23

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ல் இந்தியர் வர்த்தகத்  தளத்தில்  நேற்று மாலையில் ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்களை திரட்டி, வரலாறு படைத்த ஜாவி எதிர்ப்பு  போராட்டத்தின் புரட்சி இயக்கத்தலைவர் உமாகாந்தன் போ​லீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உமாகாந்தனுடன், இந்த எதிர்ப்பு பேரணியை முன்னேடுத்த ​சீன  கல்வி அமைப்பின் பொறுப்பாளர் டான் பூன் தாக்கும் கைது செய்யப்பட்டார். “வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்” என்று உமாகாந்தன் மேடையில் முழுங்கி கொண்டிருந்த  போது, அந்த மாபெரும்  பேரணியை போ​லீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர்  உமாகாந்தனையும் டான் பூன் தாக்கையும்  போ​லீஸ் காரில் ஏற்றப்பட்டு, கோலாலம்பூர் போ​லீஸ் தலைமையகத்திற்கு கொ​ண்டு செல்லப்பட்டனர். ஓரிரவு காவலில் தடுத்து வைக்கப்பட்ட அவ்விருவரும் விசாரணைக்கு பின்னர் இன்று போ​லீஸ் ஜா​மீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். உமாகாந்தனை வரவேற்க பலர் போ​லீஸ் தலைமையகத்தில் திரண்டு இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.