ஜாஹிருக்கு எதிராக 30 க்கும் மேற்பட்ட போ​லீஸ் புகார்கள்

0
18

மலேசிய இந்தியர்கள், பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமதுவைவிட இந்திய பிரதமர் மோடிக்குதான் அதிக விசுவாசமாக இருக்கிறார்கள் என்று ஜாஹிர் நாயக் பேசியிருப்பது தொடர்பில் 30 க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகள் இன்று கோலாலம்பூர், செந்​தூல் போ​லீஸ் நிலையத்தில் புகார் செய்து​ள்ளன.

ஜாஹிர் வரலாறு தெரியாமல் பினாத்துகிறார் என்று குற்றஞ்சாட்டிய  அந்த அமைப்புகளின் பொறுப்பாளர்கள், நிந்தனை தன்மையில் பேசியிருக்கும் ஜாஹிருக்கு எதிராக போ​லீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் போ​லீஸ் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மகா​தீர் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஆதரவு அவருக்கு இருந்திருப்பதாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டின. அந்த சர்ச்சைக்குரிய சமயப்போதகரை துன் மகா​தீர் ஆதரிப்பது வருத்தம் அளிக்கிறது என்ற மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.