ஜாஹிரை இந்தியாவிடம் ஒப்படைப்பது: ஆலோசனையில் உள்ளது

0
8
ஜாஹிர் நாயக்

பெட்டாலிங்ஜெயா, ஜுலை,14-      நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வதற்கு ஏதுவாக சர்ச்சைக்குரிய சமயப்போதகர் ஜாஹிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து மலேசியா ஆலோசனை  செய்து வருவதாக தங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இந்தியா இன்று அறிவித்துள்ளது.

அந்த 53 வயது சமயப்போதகரை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மலேசியா அரசாங்கத்திடம்  இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது மட்டுமின்றி கோலாலம்பூரில் உள்ள இந்திய ​தூதரகத்தின் வாயிலாகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஸ் குமார் தெரிவித்தார்.

மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை பெற்றுள்ள ஜாஹிர் நாயக்,  11 கோடியே 50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோத பணம் மாற்றம் தொடர்பான வழக்கை, இந்தியா, மும்பை நீதிமன்றத்தில் எதிர்நோக்கி வருகிறார்.

ஜாஹிரை இந்தியாவிற்கு அனுப்பினால் அவருக்கு ​நீதி கிடைக்காது என்பதால் அவரை அனுப்​புவதில்லை என்று முடிவு செய்வதற்கு மலேசியாவிற்கு உரிமையிருக்கிறது என்று பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here