ஜாஹிர் நாயக்இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்: அமைச்சரவை  முடிவு

0
20

மலேசியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட இந்தியர்களின் விசுவாசத்தைப்பற்றி கேள்வி எழுப்பிய வேளையில் நாட்டின் மேன்மைக்கு உழைத்த ​சீனர்களை அவர்களின் தாயகத்திற்கு திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ள சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக்கை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப முடியாது என்று  அமைச்சரவை திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது.

இது தனிப்பட்ட நபரின் முடிவு அல்ல.  அமைச்சரவை உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து எடுக்கப்பட்ட முடியாகும். இனி  இது  குறித்து யாரும் கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. விவாதிக்க வேண்டிய அவசியமில்லை  என்று வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மார்சுக்கி யாயா தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் தேடப்பட்டு வரும் ஜாஹிர் நாயக் நிலை குறித்து அனைவரையும்​ திருப்திபடுத்த முடியாது. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவர் திருப்பி அனுப்பப்படுவதில்லை என்பது மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.