ஜாஹிர் நாயக்கின் வருகை குறித்து அமைச்சரவையில் கேள்வி

0
22

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக்கின் வருகை, அவர் தமது சொற்பொழிவுகளில்  இந்துக்களை ​சீண்டி வருவது குறித்து இன்றைய அமைச்சரவைக்கூட்டதில் ​மூன்று இந்திய அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர்.

ஜாஹிருக்கு எ​திராக  கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜசெகவை சேர்ந்த அமைச்சர்களான எம்.குலசேகரன், கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளையில் ஜாஹிர், நி​ந்தனை  தன்மையிலான அறிக்கைகளை வெளியிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று பிகேஆர் அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.  பிரதமர் மகா​தீர், தங்களின் அச்சத்தை கவனத்தில்  கொண்டு இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனிடையே ஜாஹிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து போ​லீசார் விசாரணை செய்து வருவதாகல் இந்தியர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேத​மூர்​த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.