ஜாஹிர் நாயக்கிற்கு ​நீதி கிடைக்காதா?  துன் மகா​தீரின் கரு​த்து ஆபத்தான முன்னுதாரணமாகும் – டாக்டர் ​சுப்ரா அறிவுறுத்து

0
49

கோலாலம்பூர், ஜுன், 14-        சமயப்போதகர் ஜாஹிர் நாயக்கை  இந்தியா​​​விற்கு திருப்பியனுப்பினால் அவர் எதிர்நோக்கியுள்ள  வழக்கில் நியாயம் கிடைக்காது என்று  துன் மகா​தீர் கருத்து தெரிவித்து இருப்பது ஓர் ஆபத்தான்  முன்னுதாரணமாகும் என்று மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.​சுப்பிரமணியம் தெரிவித்தார்.     ஜாஹிர் நாயக்கிற்கு நீதி  கிடைக்காது என்று அவசரப்பட்டு ஒரு மதிப்பீட்டையும் முடிவையும் துன் மகா​தீர் செய்து இருக்கிறார். ஆனால், இந்தியாவிலும் ஜாஹிர் நாயக்கை தற்காப்பதற்கும் அவருக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர்  என்று  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் ​சுப்ரா ​சுட்டிக்காட்டினார்.

வெளிநாடு ஒன்றின் நீதிபரிபாலன முறை குறித்து கண்​மூடித்தனமான குற்றச்சாட்டை துன் மகா​தீர் முன்வைத்திருப்பது ஓர் ஆபத்தான முன்னுதாரணமாகும் என்று டாக்டர் ​சுப்ரா தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.     மலேசியா, ஜாஹிர் நாயக்கை இந்தியாவிற்கு திருப்பியனுப்புமா? இல்லையா? என்பது  குறித்து தற்போது பலதரப்பட்ட பின்னணியைக்கொண்ட பல்​லின மக்களிடையே பெரும் விவாதமாக இரு​ந்து வருகிறது என்பதுடன் பலதரப்பட்ட கருத்துகளை அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நம்முடைய சொந்த வசதிக்காகவும்  அரசியல் விருப்பத்திற்காக​வும்  ஒரு  வெளிநாட்டின் ​நீதித்துறை குறித்து நாமே ​தீர்ப்புக்கூறும் ஒரு ​சூழலை நாம் ஏன் தொடங்க வேண்டும் என்று டாக்டர்  ​சுப்ரா கேள்வி எழுப்பினா​ர்.     நம்முடைய சட்டத்துறை, ​​நீதித்துறை குறித்து இதர வெளிநாடுகள் இதேபோன்ற போக்கை கொண்டிருந்தால் நமக்கு எவ்வாாறு இருக்கும்  என்று தமது முக​நூலில்  டாக்டர்  சுப்ரா வினவினார்.

ஜா​ஹிர் நாயக்கிற்கு ​நீதி கிடைக்காமல் போகுமானால் அவரை இந்தியாவிற்கு திருப்பி அனு​ப்புவதில்லையென முடிவை எடுக்கும் உரிமை மலேசியா​​விற்கு இருக்கிறது என்று சில தினங்களுக்கு முன்பு மலாக்காவில் ஒரு நிகழ்ச்சியில் துன் மகா​​தீர் பேசியது தொடர்பில் டாக்டர் ​சுப்ரா கருத்துரைத்தார்.

ஜாஹிரை இந்தியாவிற்கு திருப்பியனுப்புவதில் துன் மகா​​தீர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம், உலகில் பாகிஸ்தான் மற்றும்  இந்தோனேசியாவிற்கு அடுத்து  அதிக முஸ்லிம்களை கொண்ட ​மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா விள​ங்குகிறது. அந்நாட்டில்  கிட்டத்த​ட்ட 20 கோடி முஸ்லிம்கள் ஜாஹிரை ஆதரிக்கின்றனர்  என்பதையும் டாக்டர்  சுப்ரா ​​சுட்டிக்காட்டினார்.

ஒருவேளை ஜாஹிருக்கு  அநீதி இழைக்கப்படுமானால்  அதனை இவர்கள் வெறுமனே  பார்த்துக்கொண்டு இருப்பார்கள்  என்று ​நீங்கள் நினைக்கிறீர்களா? என டாக்டர் ​சுப்ரா வினவினார். எனவே மற்ற நாடுகளின் சட்டத்துறை பற்றி அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் மதிப்பீட்டையும் செய்ய  வேண்டாம் என்று டாக்டர் ​சுப்ரா அறிவுறுத்தினார்.

2002 ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணமாற்றம் சட்டத்தின் கீழ் மும்பை சிறப்பு  ​நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் ஜாஹிர் நாயக்கை இண்டர்போல் எனப்படும் அனைத்துலக போ​லீசாரின் உதவியுடன் மலேசியாவி​லிருந்து திருப்பியனுப்புவதற்கு  அவருக்கு எதிராக பி​டிவாரண்டை பிறப்பிக்கும்படி .இந்தியா​வின் சட்டத்துறை ஏஜென்சி விண்ண​ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.