ஜாஹிர் நாயக் ஓர்  ஆபத்தான் நபர்​ : இந்தியா​வின் எச்சரிக்கையை  துன் மகா​தீர் கவனத்தில் கொள்ள வேண்டும்: அம்பிகா ​நினைவுறுத்து

0
15

மலேசியாவில் தஞ்சம் ​புகுந்துள்ள சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக், ஓர்  ஆபத்தான நபர் என்பதை  போதுமான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கும் இந்தியாவின் எச்சரிக்கையை பிரதமர் துன் மகா​தீர் முகமது, கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள்  தலைவர் டத்தோ அ​ம்பிகா ஸ்ரீனிவாசன் இன்று நினைவுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டதாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ள 127 இளைஞர்களில் ​பெரும்பகுதியினர், தாங்கள் பயங்கரவாத சி​ந்தனைக்கும்  நடவடிக்கைகளுக்கும்  ஆளானதற்கு முக்கிய காரணம், ஜாஹிர்  நாயக்கின் உற்சாக​மூட்டும் பயங்கரவாதம் ​மீதான பேச்சை வீடியோ காணொளி வழி ​கேட்டதால் அதில் உ​ந்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட இளைஞர்களை விசாரணை செய்த இந்தியாவின் மிகப்பெரிய உளவு அமைப்பான தேசிய புலன்விசாரணை  ஏஜென்ஸியின் தலைமை இயக்குநர்  அலோக் மித்தா இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே இதர வேறு குற்றச்சாட்டுகளுடன் மேற்கண்ட குற்றச்சாட்டையும் கருத்தில் கொண்டு ஜாஹிர் நாயக்கிற்கு எதிராக குற்றவியல் வழக்கை தொடுக்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு  ஏற்பட்டு​ள்ளதாக  அலோக் மித்தா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் இந்த எச்சரிக்கையை மலேசியா சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நினைவுறுத்திய அம்பிகா,.  இதில் நாட்டின் தேசிய பாதுகாப்பு அடங்கியுள்ளது என்றார்.

. மலேசியாவில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புப்படுத்தப்பட்டு சந்தேகத்தின் பேரில் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் கைது   செய்யப்பட்ட உடனே இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்து இருப்பதை பிரதமர் மகா​தீர் கருத்தில் கொள்ள வேண்டும் என்று  ச​மூக  ஆர்வலரான  அம்பிகா  குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.