ஜோகூர் பாருவில் சீனா இணைத் தூதரகம் திறக்க வேண்டும்- சுல்தான்

0
172

ஜோகூர் பாரு : ஜோகூர் பாருவில் சீனா மேற்கொண்டு வரும் பல்வேறு முதலீடுகள் காரணமாக இங்கு அதன் இணைத் தூதரகம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென கோருகிறார் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தார்.

சீனாவின் தூதுக்குழு நடப்பு வர்த்தகத்தையும் முதலீட்டையும்  பலப்படுத்துவது மட்டுமல்லாமல்,இங்குள்ள சீன நாட்டு வர்த்தகர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் வழங்கவும் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஜோகூரின் வளர்ச்சியும் அதன் வர்த்தக சார்பு கொள்கைகளும்,சீனாவின் பல நிறுவனங்களையும் தனிமனிதர்களையும் கவர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.அவர்கள் சொத்துப் பிரிவில் மட்டும் முதலீடு செய்யவில்லை, அவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஜோகூர்

பாருவிலும் இஸ்கந்தார் புத்ரியிலும் நிரந்தரமாக தங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.ஆகவே,அவர்கள் இங்கு இணைத் தூதரகம் ஒன்றை அமைக்க நியாயமிருப்பதாக அவர் தெரிவித்தார்.GS

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.