டி.டி.வி. தினகரன் கட்சிக்கு தனி சின்னம் ?

0
45

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு செய்யப்படும் என்று பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்து தனி சின்னம் அளிக்கும்படி கோரிக்கை விடுத்து இருந்தார்.

தினகரனின் இந்த மனு தொடர்பான விசாரணை இன்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது. இதில் தினகரன் தரப்பு சார்பில் வக்கீல் செந்தூர்பாண்டியன் ஆஜரானார்.

இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்வது குறித்தும், தனி சின்னம், தனி கொடி வழங்குவது குறித்தும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதன் முடிவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தனி கொடி, சின்னம் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.