டெல்லியில் இன்றும் கடும் காற்று மாசு

0
36

டெல்லியில் தீபாவளி பண்டிகை நாள் முதல் காற்று மாசு அதிகரித்தது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது.

காற்று தரக் குறியீட்டின்படி 50 புள்ளிகள் வரை காற்று மாசு இருந்தால் ‘நல்லது’. 100 புள்ளிகள் வரை இருந்தால் ‘திருப்தி’. 200 புள்ளிகள் வரை இருந்தால் ‘மிதமானது’. 300 புள்ளிகள் வரை இருந் தால் ‘மோசம்’. 400 புள்ளிகள் வரை ‘மிகவும் மோசம்’. 500 புள்ளிகள் வரை இருந்தால் ‘ஆபத்தானது’. 500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் ‘அவசர நிலைக்கு’ ஒப்பானதாகும்.

இந்தநிலையில் டெல்லியில் இன்று காலையிலும் காற்று மாசு அளவு மிக மோசமாக இருந்தது. மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கினர். அடர்ந்த புகை போன்ற காற்று மாசை குறைக்க மாநகராட்சி சார்பில் லாரிகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.