“டெஸ்ட் வெச்சுதான் என்னையும் செலக்ட் பண்ணார் விஜய் ஆண்டனி” – கிருத்திகா உதயநிதி

0
155

“டெஸ்ட் வெச்சுதான் என்னையும் செலக்ட் பண்ணார் விஜய் ஆண்டனி” – கிருத்திகா உதயநிதி

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காளி’. வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வேல ராமமூர்த்தி, நாசர், ஆர்.கே.சுரேஷ், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், மதுசூதன் ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கிருத்திகா உதயநிதி, “உங்களையெல்லாம் (எடிட்டர்) டெஸ்ட் வெச்சுதான் செலக்ட் பண்ணதா சொன்னீங்க. டெஸ்ட் வெச்சுதான் என்னையும் செலக்ட் பண்ணார். அது எனக்கு ஆரம்பத்தில் தெரியாது, படம் எடுத்து முடித்த பிறகுதான் அதைச் சொன்னார். கதை சொல்வதற்காக மூன்று மாதங்களாக அவரை ஃபாலோ பண்ணேன். ‘உங்க வீடு எங்க இருக்கு? நான் அங்கேயே வந்து கதை கேட்குறேன்னு சொன்னார். ‘இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே…’ என வியந்தேன்.

வீட்டுக்கு வந்து முதல் கதை கேட்டுவிட்டு, ‘எனக்கு இது செட்டாகாது. ஆனாலும், நாம சேர்ந்து பணியாற்றலாம்’ என்றார். ‘எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க’ என்று கேட்டேன். இரண்டாவது முறையும் என் வீட்டுக்கே வந்து கதை கேட்டார். எனக்கு கம்ஃபர்ட்டபிளாக இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு வந்து கதை கேட்கிறார் என்று நினைத்தால், ‘கதை பிடிக்கவில்லை என்றால் உங்க வீட்டிலேயே வைத்து சொல்வது ஈஸியாக இருக்கும். அதனால் தான் உங்க வீட்டுக்கே வந்து கதை கேட்டேன்’ என்றார். இந்த டெக்னிக்கை பலரிடமும் பின்பற்றுவதாகச் சொன்னார்” என ரகசியம் பகிர்ந்தார் கிருத்திகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.