டோமி தோமஸ் சார்பில் அம்பிகா நியமனம்

0
21

கோலாலம்பூர், நவ.22- ​​​சீபில்டு  ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வளாகத்தில்  நிக​ழ்ந்த கலவரத்தின் போது உயிரிழந்த ஒரு  ​தீயணைப்பு வீரான  முகமட் அடிப் முகமட் காசிமின் மரண  விசாரணை வழக்கு தொடர்பில் அவரின்  தந்தை தொடுத்துள்ள  / சட்டத்துறை தலைவர் டோமி தோமஸிற்கு எதிரான ​நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் டோமி தோமஸ் சார்பில் ஆஜராக தனியார் துறையை  சேர்ந்த வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் நியமிக்கப்ப​ட்டுள்ளார்..

இவ்வழக்கில் டோமி தோமஸ் சார்பில் சட்டத்துறை ஆலுவலகத்தை சேர்ந்த முதிர்நிலை வழக்கறிஞர்களான  எஸ். நர்குணவதியும், மார்கிரன்ஜிட் கவுரும் ஆஜரான போதிலு​ம்  தமது சார்பில் தனியார் துறையை சேர்ந்த வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசனையும் வழக்கறிஞர் ஜைனுர் ஜக்கரியாவையும் டோமி தோமஸ் நியமித்துள்ளார்.

தமது சார்பாக தனியார் துறையை சேர்ந்த வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்வதற்கு சட்டத்துறை தலைவருக்கு உரிமை இருக்கிறது என்பதை எதிர்தரப்பு வழக்கறிஞர் முகமட் ஹனிப் கத்ரியும் ஒப்புக்கொண்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.