தகவல் தொடர்பு மேம்பாட்டு குறியீட்டில் மலேசியாவுக்கு 63வது இடம்

0
232

2017ஆம் ஆண்டு அனைத்துலக தகவல் தொடர்பு மேம்பாட்டு குறியீட்டில் 176 நாடுகளில் மலேசியா 63 இடத்தில் உள்ளதாக தொடர்பு பல்லூடக அமைச்சர் டத்தோ சிறீ டாக்டர் சாலேக் சாயிட் கெருவாக் தெரிவித்துள்ளார். உலகில் மிகவும் நியாமான நம்பகதன்மையுடைய வெளியீடாக அங்கிகரிக்கப்படும் ஆண்டு அறிக்கையான அனைத்துலக தொலைத்தொடர்பு சங்கத்தின் சமூக தகவல் அளவிடல் அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது என டாக்டர் சாலேக் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் அதிவேக இணைய சேவையை விரிவுப்படுத்த நாடுமுழுவதும் 163 முதன்மை இணைப்புகளை தரம் உயர்த்தியுள்ளது. புறநகர் அகண்ட அலைவரிசையின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக சாலேக் மேலும் தெரிவித்தார்.#vp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.