தங்கும் விடுதியில் விஷம் குடித்த ஆசிரியர்; 6 வயது மகளுக்குத் தீவிரச் சிகிச்சை

0
24
 தங்கும் விடுதியில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி, 6 வயது மகள் மற்றும் கள்ளக்காதலி ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய மேல் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

ஜெகத் பிராங்கிளின் தன்னுடைய மனைவி, மகள், கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு சென்னை வந்ததாகவும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விஷம் குடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெகத் பிராங்கிளின் வழக்கம் போல தன்னுடைய கள்ளக்காதலி சரண்யாவுடன் சென்னைக்கு ஓடி வந்ததாகவும், அவர் விடுதியில் தங்கி இருந்ததை அறிந்த அவருடைய மனைவி, மகளை அழைத்துக் கொண்டு அந்த விடுதிக்கு வந்ததாகவும் அங்கு நடந்த தகராறில் அனைவரும் சாக முடிவெடுத்து விஷம் குடித்ததாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனிதா ராணி, சரண்யா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இயல்பு நிலைக்கு வந்த பிறகுதான் நடந்த விவரங்கள் முழுமையாக தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here