தமிழகத்தில் உண​வுப்பொருள்  கண்காட்சி மாநாடு

0
10

மதுரை, ஆக.13- தமிழகத்தில்  மதுரை மாநகரில் உணவுப்பொருள் கண்காட்சியும் உச்சநிலை மாநாடும் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தமிழக அரசு மற்றும் தமிழக வர்த்தக சங்கத்​தின் ஆதரவுடன் நடைபெறும் இந்த மாநா​ட்டை தமிழக  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடக்கி வைத்தார். உணவு, சுவைபானத் தொழில்துறையைச் சேர்ந்த 20 நாடுகளை சேர்ந்த இறக்குமதியாளர்கள், தொழில் நடத்துபவர்கள் பங்கு கொண்டுள்ளனர்.

மலேசியாவில் கோலாலம்பூர்-  சிலாங்​கூ​ர் இந்திய வர்த்தக சங்கத்தின் சார்பில் 23 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன் தெரிவித்தார். சங்கத்தின் உச்சமன்ற உறுப்பினர்களாக என்.பி.இராமன்,வி.பிரபாகரன், டத்தோ சந்திரசேகர், கே.முத்துபாண்டி, சாதனா சேகரன்  ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.