தமிழகத்தில் டாக்டர்கள் 4-வது நாளாக ஸ்டிரைக்

0
35

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் பணிக்கு வராததால் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனால் வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்க வில்லை. உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

தீபாவளிக்கு பிறகும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் தீவிரம் அடைந்துள்ளது. இன்று முதல் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அரசு டாக்டர்கள் நியாயமான கோரிக்கையை நிறை வேற்ற வேண்டும் என்று அவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சுமார் 1000 பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. டாக்டர் சங்கத்தின் ஒரு பிரிவினர் மட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.