தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் வெற்றிபெறும் – தம்பிதுரை

0
156

தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக பாஜகவினர்  தினமும் ஏதாவது ஒன்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  தம்பிதுரை, தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும்  என பாஜகவினர் ஆசைப்படுகிறனர். ஆசைக்காக மக்கள் ஒட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. தமிழகத்தின் கலாச்சார, மொழியை காக்க எப்போதுமே திராவிட கட்சிகள் தான் வெற்றிபெறும். தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

மதுரை கூட்டம், தேர்தல் பிரச்சார கூட்டம் என முதலமைச்சர் கூறியுள்ளார். எனது நாடாளுமன்ற தொகுதியில் கிராமங்களுக்கு சென்று பிரசாரத்தை செய்து வருகிறேன் என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய தம்பிதுரை, தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற அரசின்  திட்டங்களையே எடுத்துக்காட்டாக கூறி வருகின்றோம். 8 வழிச்சாலையில் உள்ள பிரச்னைகள் முதலமைச்சருக்கு தெரியும். அதில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது காவிரி பிரச்னை வந்ததால் அதிமுக உறுப்பினர்கள் 23 நாட்கள் அவையை முடக்கினர். தற்போது காவிரியில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.