தமிழகத்தில் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம் -கே.எஸ். அழகிரி

0
89
சென்னை,தமிழகத்தில் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்  கே.எஸ்.அழகிரி தலைமையில், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையை அளிக்க வேண்டும். விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், கிரிவல்ல பிரசாத், செயல் தலைவர்கள் ஹெச்.வசந்தகுமார், ஜெயக்குமார், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், விஷ்ணுபிரசாத் , திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு,பீட்டர் அல்போன்ஸ், குமரி அனந்தன் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பின்னர் நடைபெறும். மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸை ஆதரிப்பதால் திமுகவோடு கூட்டணி தொடர்கிறது. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.