தமிழகத்தைத் தொடும் தென்மேற்கு பருவமழை

0
16

 

குமரி மாவட்டத்தின் அரணாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை கொட்டி வருகிறது. மலை கிராமங்களில் வெள்ளப் பாதிப்பை தடுக்கவும், மழை வெள்ளத்தில் சிக்குவோரை மீட்கவும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

மேற்கு தொடர்ச்சி மலையில் பருவமழை பெய்யத் தொடங்கியதை அடுத்து நெல்லை மாவட்டத்திலும் மழை ஆரம்பமானது. இதனால் குற்றாலம் மலையிலும் மழை பெய்து அருவியில் வெள்ளம் கொட்டியது. பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் சீதோஷ்ண ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here