தமிழகம் முழுவதும் 2,951 பேருக்கு டெங்கு

0
31

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2951 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற வகையில் செயல்படுவது தான் அரசின் இலக்கு.

டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் முதல் ஐந்து நாட்கள் வரை பெரிய அளவில் பாதிப்பு இருக்காது ஐந்து நாட்களுக்குப் பிறகு தான் பாதிப்பு ஏற்படும் அதனால் அதற்குள் அதற்கான சிகிச்சையை பொதுமக்கள் எடுக்க வேண்டும்.

சென்னையை பொறுத்தவரையில் வடசென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

டெங்கு காய்ச்சலால் இதுவரை தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.