தவறான அமைப்புகளுக்கு தரப்பட்ட நிதி, தவறாக செலவழிக்கப்பட்டுள்ளது!- மித்ரா

0
92

கோலாலம்பூர்: இந்திய சமூகத்திற்கு உதவுவதற்காக நூற்றுக்கணக்கான அரசு சாரா நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பண ஒதுக்கீடு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) தெரிவித்துள்ளது.

அவற்றில், தனிப்பட்ட ஆதாயத்திற்காக உட்பட அப்பணம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. முன்னாள் அரசாங்கத்தால், அறிமுகப்படுத்தப்பட்ட, செடிக்  (SEDIC)  எனப்படும்  இந்திய  சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு தற்போது மித்ரா எனும் பெயரில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

முந்தைய நிருவாகத்தால் செய்யப்பட்ட அறிவிப்புகளின் அடிப்படையில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்திய சமூகத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு மற்றும் மேம்பாட்டுச் செலவுகளுக்காக சுமார் 230 மில்லியனுக்கும் மேலாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தவறாகப் பணத்தை செலவழித்த அமைப்புகளை கூடிய விரைவில் கண்டறிந்து அவை கருப்பு பட்டியல் இடப்படும் என இலச்சுமணன் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமும் (எம்ஏசிசி) புகார் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

selliyal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.