தாய்லாந்தில் அருவி உச்சியில் இருந்து விழுந்து 6 யானைகள் பலி

0
10

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் ‘காவோ யா’ தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த வனச் சரணாலயத்தை தாய்லாந்து வனத்துறை மற்றும் வனவிலங்கு காப்பகம் பராமரித்து வருகிறது.

இந்த வனத்துக்குள் ‘ஹாய் நரோக்'(ஹெல் அபிஸ்) எனும் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந்த வனவிலங்கு காப்பகத்தில் ஏராளமான யானைகள் இருக்கின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து அந்த அருவி அமைந்திருக்கும் பகுதியில் இருந்து யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது. இந்த பிளிறல் சத்தத்தைக் நீண்ட நேரத்துக்குப்பின் கேட்ட வனப் பாதுகாவலர்கள் அந்த இடத்தை நோக்கி சென்றனர்.

அங்கு பார்த்தபோது, யானைகள் கூட்டம் அருவியின் பள்ளத்தில் விழுந்து உதவிக்காக பிளிறியடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், நீண்ட போராட்டத்துக்குப்பின், பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்த இரு யானைகளை அங்கிருந்து மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.