திராவிடர்களின் தனிப்பெருநாள் பொங்கல்! மதிக தேசியத்தலைவர் எப். காந்தராசு வாழ்த்து!

0
48

பொங்கல் புதுநாளில் தமிழர்கள் எழுச்சிப் பெறவும், ஆரியத்தால் வீழ்ச்சியுற்ற விழுப்புண்களை கடந்து செல்லவும் வேண்டுமென்று திருவள்ளுவராண்டில் வேண்டுகோள் விடுப்பதாக மலேசியத்திராவிடர் கழகத் தலைவர் கழகச்சுடர் எப். காந்தராசு தமது பொங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பண்பாட்டுக்கலத்தில் தமிழர் நாகரீகம் முதுமைப்பெற்றதாகும் மொழியின் உயிர்ப்பில் தமிழ் மிகவும் தொன்மையானதாகும் உலக மண்ணுலகப் படைப்பில் திராவிடம் முன்னுரிமைப்பெற்றதாகும், அந்த அடிப்படையில், உழவும் அது தொடர்பான உழைப்பும், ஒப்பாரும் மிக்காருமின்றி தமிழர் வாழ்வியலில் பொங்கலும், அதனுடைய செயல்பாடும் நுண்ணிய அறிவுச்சார்ந்தது என்பதாலே, சமயம் சாராத மதக்கலப்பின்றி வாழ்ந்த திருவள்ளுரையே முதன்மைப்படுத்தி தமிழரின் புத்தாண்டெனக் கொள்ள வேண்டுமென்ற தொலைநோக்கு அடிப்படையில் சிந்திக்க வேண்டுமென்று மலேசியத்திராவிடப்பெருங்குடி மக்களைக் கேட்டுக் கொள்வதோடு, பொங்கல் இனிய வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்வதாக மதிக தலைவர் காந்தராசு விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here