திரிஷாவை கிண்டல் செய்த ரசிகர்கள்

0
155

திரிஷாவுக்கு வெளிநாட்டு பயணங்களில் அலாதி பிரியம். படப்பிடிப்புகள் இல்லாமல் ஓய்வில் இருக்கும்போது தோழிகளுடன் ஏதேனும் ஒரு தேசத்துக்கு பறந்து விடுவார். அங்கு இடங்களை சுற்றி பார்ப்பது, வணிக வளாகங்களில் ஷாப்பிங் சென்று விதவிதமான பொருட்களை வாங்கி குவிப்பது, கடலில் குளிப்பது என்று நாட்களை கழிப்பதும் அவற்றை படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதுமாக இருப்பார்.

திரிஷா பார்க்காத வெளிநாடுகள் குறைவு என்றும் அதிக நாடுகளை பார்த்த நடிகைகளை கணக்கெடுத்தால் முதல் இடம் திரிஷாவுக்கே கிடைக்கும் என்றும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் அவர் சுற்றுலா சென்று எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.

அந்த படத்தில் திரிஷா கிழிந்த ஜீன்ஸ் அணிந்து தொடை பகுதி முழுமையாக தெரியும்படி போஸ் கொடுத்து இருந்தார். நிறைய பேர் கிழிந்த பேண்ட் அணிவதை பேஷனாக வைத்துள்ளனர். ஆனால் திரிஷா அதுபோல் அணிந்ததை ரசிகர்கள் வரவேற்கவில்லை. சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து கருத்துகள் பதிவிடுகிறார்கள்.

ரிஷாவின் பேண்ட்டை நாய் கடித்து விட்டது என்றும், பாவம் புதிய பேண்ட் வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை என்றும் கிண்டல் செய்து கருத்து பதிவிடுகிறார்கள்.

இன்னொருவர் என்னாப்பா கிழிஞ்ச துணி போட்டிருக்க அவ்ளோ கஷ்டமா என்று கேட்டு இருக்கிறார்.

இந்தி நடிகைகள் பலர் தங்கள் உடைகளை குறைத்து ஆபாசமான படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது திரிஷா பரவாயில்லை என்றும் சிலர் கூறியிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here