திரை விமர்சனம் : THE LION KING

0
21

 

காட்டின் அரசனான முஃபாஸாவுக்கு ஆண் சிங்கக் குட்டி ஒன்று பிறக்கிறது. அதன் பிறப்பை காட்டு விலங்குகள் கொண்டாடி வரவேற்கின்றன. இங்கிருந்து படம் தொடங்குகிறது.

அரசர் முஃபாஸாவின் சகோதரன் ‘ஸ்கார்’. ராஜ்ஜியம் தனக்கு கிடைக்கவில்லையே என்ற கோபத்தில் முஃபாஸாவை வீழ்த்த தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இதற்காக காட்டிலிருந்து ஒதுக்கப்பட்ட கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறது. இதற்காக முஃபாஸாவின் மகனும் வருங்கால அரசனுமான சிம்பாவை ஏமாற்றி அதற்குத் தெரியாமல் முஃபாஸாவைக் கொல்கிறது. தனித்து விடப்படும் சிம்பாவிடம் இங்கிருந்து ஓடிவிடு என்று கூறி காட்டை விட்டே விரட்டுகிறது.

பின்னர் முஃபாஸாவும் சிம்பாவும் இறந்துவிட்டதால் இனி நானே இக்காட்டின் அரசன் என்று அறிவிக்கிறது. முஃபாஸாவால் விரட்டப்பட்ட கழுதைப் புலிகளை மீண்டும் காட்டுக்குள் வரவழைத்து அட்டூழியங்களைச் செய்கிறது. தப்பிச் சென்ற சிம்பா என்னவானது? ஸ்காரிடமிருந்து காடு மீட்கப்பட்டதா என்பதே ‘தி லயன் கிங்’ படத்தின் கதை.

1994 ஆம் ஆண்டு வெளியான ‘தி லயன் கிங்’ கார்ட்டூன் படத்தின் மீளுருவாக்கமே இந்தப் படம். 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தி ஜங்கிள் புக்’ படம் பெற்ற பிரம்மாண்ட வெற்றியால் இயக்குநர் Jon Favreauக்கு ‘லயன் கிங்’கை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது டிஸ்னி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.