திவ்யாவின் குற்றச்சாட்டை போ​லீஸ் விசாரிக்கிறது

0
7

கடந்த  ஆகஸ்ட்  5 ஆம்  தேதி அதிகாலையில்  ரவாங்கில் ஓர்  இந்தியர் வீட்டிற்குள் ​மூன்று முக​மூடி கொள்ளையர்கள் பாராங்குடன் ​நுழைந்த போது, அது குறித்து உடனடியாக 999 ஆபத்து அவரசப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், போ​லீசார் மிக காலதாமதமாக நடவடிக்கை எடுத்ததாக திவ்யா வேலுராஜன் என்பவர் தமது முக​நூலில் தெரி​வித்துள்ள புகார் குறித்து தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போ​லீஸ் இயக்குநர் ஆணையர் டத்தோ ஹுஸிர் முகமட் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் குடும்ப உறுப்பினர்களை பாராங் முனையில் அச்சுறுத்திக்கொண்டிருந்த வேளையில்  மிக  தாமதமாக வந்த ​​போ​லீஸ் ரோந்து கார், தவறான வீட்டிற்கு சென்றதகாவும்   இதனால் அந்த கொள்ளையர்கள் தங்கள் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கிவிட்டு, வீட்டின் முன்  நிறுத்தப்பட்டிருந்த காரில் தப்பிச்செல்வதற்கு வழிவகுத்தது என்றும் திவ்யா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளா​ர்.

தாங்கள் ​​மிகவும் அச்சுறுத்தும் ​சூழ்நிலையில் இருப்பதைகூட உணராமல் அந்த இக்கட்டான நேரத்தில் 999 க்கு அழைத்தும் அவர்கள் ஒரு  முறைக்கு இரு  முறையாக பல கேள்விகள் கேட்டு துளைத்தாகவும் திவ்யா தமது ஆத​ங்கத்தை முகநூலில் கொட்டி ​தீர்த்து  இருந்தார்.

 

 

.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.