தீவிரவாதத்திற்கு எதிராக மிதவாதிகள் தேவை

0
98

கோலாலம்பூர் : மலேசியாவில் தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிராக, போர் தொடுக்க சமயவாதிகளுள் மிதவாதிகள் முன்வர வேண்டுமென துணைப்பிரதமர் அகமட் சாயிட் அமிடி கேட்டுக் கொண்டார்.

தீவிரவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகளை ஓரங்கட்ட, அனைத்து மத நம்பிக்கையாளர்களும் அமைதி,நடைமுறைவாதத்தை மீட்டெடுக்க முன்வர வேண்டும் என்றார் அவர். தீவிரவாதத்திற்கும் முற்போக்குவாதத்திற்கும் சமய அல்லது பண்பாட்டு பின்னணி இல்லை யென்றும்,அவை சிதைவையும் அழிவையும் ஏற்படுத்தும் சமூக நோய் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரஸ்பர ஏற்றுக்கொள்ளல்,பரஸ்பர மரியாதை,பல்வேறு நம்பிக்கையாளர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதனால்,உலகம் மனித இனத்திற்கு சொர்க்கமாக மாறும் என்றார்.இங்கு நடைபெற்ற’அனைத்துலக பல்லின சமய சமூகங்களுக்கு மத்தியில் மிதவாதம்’ எனும் கருத்தரங்கில் பேசியபோது அவர் அதனை குறிப்பிட்டார். GS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here