தீ விபத்து: மீரியில் 20 பேர் வீடுகளை இழந்தனர்

0
10

மீரி, ஜூலை 13-  மீரியில் அமைந்துள்ள லோங் பாலாயில் வசிக்கும் 20 கென்யா இனத்தவரின் வீடுகள் தீயில் கருக்கியது. தேசிய ஆரம்பப்பள்ளி லோங் பாலாய் தலையாசிரியர்தான்,  இன்று காலை 5.20க்கு ஏற்பட்ட அந்த தீ சம்பவத்தை தங்களுக்குத் தகவல் தெரிவித்ததாக, மீரி தீயணைப்பு அதிகாரி தலைவர் லோ போ கியோங் கூறினார்.

6 அறைகளைக் கொண்ட அந்த நீண்ட வீட்டில் பிடித்தத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிக நேரம் எடுத்தாக அதிகாரி லோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், லோங் பாலாய் வட்டாரத்தில் தொலைத்தொடர்பு வசதியின்மையால் சிலர் தீயணைப்பு வீரர்கள் ஹெலிகப்டர் மூலமாக சம்பவ நடந்த இடத்திற்கு வந்தனர் என்றார். சாலை வழியாக இந்த இடத்தை அடைய தீயணைப்பு வீரர்களுக்கு 8 மணி நேரம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here