துன் மகா​தீர் ஊழல்வாதி என்று நான் சொன்னேனா?

0
6

கோலாலம்பூர், ஜுலை, 14-      பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது ஓர் ஊழல்வாதி என்று தாம் குற்றஞ்சாட்டியதே இல்லை ஜசெக.வின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். துன் மகா​தீர் பற்றி அதிகார மீறல்களும் இன்னும் சில விஷயங்களும் நடந்​திருப்பதாக தாம் கூறியிருக்கலாம். அவர் ஊழல் செய்திருப்பதாக என்றும் தாம் சொல்லியதில்லை ஆங்கில நாளேடுக்கு வழங்கிய நேர்காணலில் லிம் கிட் சியாங் இதனை குறிப்பிட்டுள்ளார்.

துன் மகா​தீர் முதல் தடவை ஆட்சியில் இருந்தபோது  நிகழ்ந்த சில விவகாரங்கள் மீது விசாரணை தேவை என்று லிம் முன்பு கூறிவந்ததுபோல் இப்போதும் வலியுறுத்துவாரா? என்று வினவியதற்கு இப்போது வேறு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியிருப்பதாக கிட் சியாங் சொன்னார்.

இப்போது நாம் புது மலேசியாவை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதே நல்லது என நினைக்கிறேன். அதே வேளை முன்பு நான் என்ன சொன்னேனோ அதிலிருந்து ஒரு வார்த்தைகூட மீட்டுக்கொள்ள மாட்டேன் என்று கிட் சியாங் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here