தென்கு அட்னானை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கோரிக்கை – யோ

0
72

கோலாலம்பூர்: இன்று செய்தியாளர்களிடையே பேசிய செகம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோ, முன்னால் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ தென்கு அட்னான் தென்கு மன்சூர் அவர்களை லஞ்ச ஒழிப்பு காவல் துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தாமான் ரிம்பா கியாரா நில மோசடி வழக்கில் கூட்டரசு பிரதேச அமைச்சர் மற்றும் கூட்டரசு பிரதேச நல வாரிய தலைவர் என்ற முறையில் அவருக்கு தெரியாமல் எந்த நிலமும் விற்கப்பட்டிருக்க முடியாது என்றும், அவர் தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று கூறுவது முழுக்க பொய் என்றும், அவரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த நில மோசடி நடந்துள்ளது அதனால் லஞ்ச ஒழிப்புத் துறை இது பற்றி உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். – பிரியா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here