தேசிய கீதத்தை மாற்றியமைக்க கனடா அரசு முடிவு

0
154

ஒட்டாவா:

தேசிய கீதம் என்பது ஒவ்வொரு நாட்டின் அடையாளமாகும். பல நாடுகளில் தேசியகீதம் புனிதம் நிறைந்ததாக பாதுகாக்கப்படுவதோடு, தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கு தண்டனையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், பாலின வேறுபாடுகள் இல்லாத வகையில் தேசிய கீதத்தில் உள்ள ஒருசில வார்த்தைகளை மாற்ற கனடா அரசு முடிவு செய்துள்ளது. கனடாவின் தேசிய கீதத்தில் ‘சன்ஸ்’ (Sons) என்ற ஆண்களை மட்டுமே குறிப்பிடும் வகையில் ஒரு ஆங்கில வார்த்தை உள்ளது. இந்த வார்த்தைக்கு பதிலாக ‘ஆல் ஆப் அஸ் கமண்ட்’ (all of us command) என்று எந்த பாலினத்தையும் குறிப்பிடாமல் இருக்கும் பொதுவான வார்த்தையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான மசோதா கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஜெனரல் ஜூலி பெயட்டியிடம் அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர் இந்த மசோதாவில் கையெழுத்திட்டவுடன் கனடாவின் தேசிய கீதம் அதிகாரபூர்வமாக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here