“தேவர் மகன்” 2-ஆம் பாகம் எடுக்கிறார் கமல்ஹாசன்

0
55

சென்னை – மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டே தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன், அடுத்து தேவர் மகன் படத்தின் இரண்டாவது பாகத்தில் தான் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவியில் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேக்கு அளித்த நேர்காணலின்போது இந்த விவரத்தைக் கமல்ஹாசன் வெளியிட்டார்.

1992-ஆம் ஆண்டில் கமல்ஹாசனோடு சிவாஜி கணேசன் இணைந்து நடித்த தேவர் மகன் மாபெரும் வெற்றி பெற்ற படமாகும்.

அண்மையில் கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் -2 தமிழ்ப் படம் வெளியானது.

கமல்ஹாசன் தேவர் மகன் 2 படத்தை எடுக்கப் போகிறார் என்ற செய்தி வெளியான உடனே, அந்தத் தகவல் உலகம் முழுமையிலும் சமூக ஊடகங்களில் அதிகம் பின்பற்றப்படும் (டிரெண்டிங்) செய்தியாக பிரபலமாகியுள்ளது.

நன்றி செல்லியல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here