தைப்பிங் மருத்துவமனையில் மருத்துவர்களை அதிகாரம் செய்வதா?

0
53

தைப்பிங், ஜுலை,11-   தைப்பிங் மருத்துவமனையில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் சார்பில் ஆலோசனை வருகையாளர் உறுப்பினர் வாரியத்தில் இடம் பெற்றுள்ள 15 பேரில் பலர் அந்த மருத்துவமனையின்  மருத்துவர்களை அதிகாரம் செய்வதாக பரவலாக புகார்கள் கூறப்படுகின்றன.

ஒரு மருத்துவரைப் போல் நடந்து கொள்ளும் ஆலோசனை வருகையாளர் உறுப்பினர்களின் போக்கு,  அந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், உயர்நிலை தாதியர்களை அச்சம் அடைய செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தைப்பிங் மரு​த்துவமனைக்கு திடீர் வருகை புரிந்துள்ள பேரா மாநில சுகாதார, பயனீட்டாளர் விவகாரம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசனிடம் மருத்துவமனையின் நிர்வாகத்தினர் புகார் கொடுத்துள்ளதாக அறியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.