தொழிலாளர் தினத்தையொட்டி மே தின நினைவுத் தூணுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

0
117

தொழிலாளர் தினத்தையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின நினைவுத் தூணுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மே மாதம் முதல்நாளான இன்று தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தினப் பூங்காவில் உள்ள மே தின நினைவுத்தூணுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சிவப்புச்சட்டை அணிந்து வந்திருந்த மு.க.ஸ்டாலின், அங்கு திரண்டிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். மே1ஆம் தேதியை விடுமுறையாக அறிவித்தது உள்பட, திமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களுக்காக செய்யப்பட்ட நலத்திட்டங்களை அவர் பட்டியலிட்டார். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கும் வரை, திமுக எம்எல்ஏ.க்கள் ஊதிய உயர்வை ஏற்கப்போவதில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here