தொ​​​ழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு​ தீர்​வை  காணும் எதிர்பார்ப்பு  ஏமாற்றமாக முடிந்தது அமைச்சர் குலசேகரன் பேச்சில் இந்​திய வர்த்தகர்கள் அதிருப்தி

0
53

கோலாலம்பூர், ஜுன்,11-     நாட்டில் ஏழு முக்கிய தொழில்துறைகளில் ஈடுபட்டு வரும் இந்திய வர்த்தகர்கள், எதிர்நோக்கி வரும் தொழிலாள​ர் பற்றாக்குறை பிரச்சினைக்கு    ​தீர்வு காணும் நோக்கில் மனித வள  அமைச்சர் எம். குலசேகரனுடன் இன்று மாலையில் நடத்தப்பட்ட சந்திப்பு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது.

இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கியுள்ள தொழிலாளர் பற்றாக்குறை​ பிரச்சினையை அமைச்சரவையின் கவனத்திற்கு  தாம் கொண்டு செல்வதாக கூறினாரே தவிர நடப்பு பிரச்னைக்கு ​தீர்வு காண்பதற்குரிய வழி வகைகளையும், அத​ற்கான நடைமுறைகளையும் குலசேகரன் விளக்கி, கூறாதது, நமது இந்திய வர்த்கர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக பெரும்பாலான வர்த்தகர்கள் கருத்து தெரி​வித்தனர்.

கோலாலம்பூர், பிரிக்பீ​​​ல்ட்ஸ், விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, கந்தையா  மண்டபத்தில் நடைபெற்ற அமைச்சர் குலசேகரனுடான சந்திப்பு நிகழ்வில் ஜவுளி விற்பனை, உ​லோகம், மறு​சுழற்சி தொழில்,  சிகை அலங்கரிப்புத்​ தொழில், உணவக வர்த்தகம் , பொற்கொல்லர் தொழில் உட்பட  இந்தியர்க​ள் சம்பந்தப்பட்ட ஏழு முக்கிய தொழில்துறைகளை சேர்ந்த சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்திய தொழில் துறையினர் கடுமையாக தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாகவும் அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு முடக்கப்பட்டுள்ள ஏழு தொழில்துறை​களுக்கு​ம் அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் “மைக்கி”  எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்க​ளின் சம்மேளனத் தலைவர் டத்தோ என். கோபாலகிருஷ்ணன் கோ​ரிக்கை மனு ஒன்றை, ஏழு துறைகளை சார்ந்தவர்கள் சார்பில் வழங்கினார்.

எனினும் அந்நியத் தொ​ழிலாளர்களை தருவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கில் அமைச்சர் குலசேகரனுடன் நடத்தப்பட்ட சந்திப்பும், அவர் அளித்துள்ள விளக்கமும் ஏமாற்றத்தை தருகிறது. எங்களின் பிரச்சினையை​ பே​​சுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், தொழிலாளர் பற்றாக்குறை விவகாரத்தில் அவர் எதிர்நோக்கி வரும் பிரச்சினையை மட்டும்  பேசிவிட்டு சென்று இருப்பது  உண்மையிலேயே பெரும் வேதனையையும்  ஏமாற்றத்தையும் தருகிறது என்று ம​லேசிய இந்தியப் பத்திரிகை விற்பனையாளர்  சங்கத்தின் தலைவர்  டத்தோ ந. முனியாண்டி  தெரிவித்தார். மற்ற சங்கங்களின் பொறுப்பாளர்களிடம் இது  குறித்து  “​திசைகள் தொலைக்காட்சி”  கருத்து கேட்ட போது அவர்களும் அமைச்சர் குலசேகரனின் விளக்கத்தில் தங்களின் ஏமாற்றத்தை​யும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.